Virus Tamil விளக்கம் What is Virus? Virus இரண்டு பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று புரத உறை, மற்றையது DNA/RNA. Virus Tamil Explain Virus structure in Tamil.
வைரஸ் என்றால் என்ன? (Virus Tamil Explain)
Virus Tamil விளக்கம்...
வைரஸ் என்றால் அடிப்படையில் ஒரு பரம்பரை அலகையும் (DNA அல்லது RNA), புரத உறை ஒன்றையும் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு ஒரு முற்றுமுழுதான கல அமைப்புக்கு ஒத்துப்போகவில்லை. இந்த அமைப்பில் அனுசேபம், சக்தி தொகுப்பு போன்ற செயற்பாடுகள் இடம் பெறுவதற்குரிய வசதிகள் எதுவும் இல்லை. ஆகவே ஒரு வைரஸ் உயிர்ப்பு நிலையில் இடுப்பதாயின் அதற்கு கல அமைப்பு ஒன்று அவசியமாகும். ஆகவே இந்த வைரஸ் ஒரு அங்கியின் அல்லது தாவரத்தின் காலத்தினுள் தனது DNA அல்லது RNA ஐ உள்செலுத்தி அந்த கலத்தினை தனக்கு ஏற்றவாறு முற்றுமுழுதாக மாற்றி அமைத்து உயிர்ப்பு நிலை அடைந்து தன்னைத்தான் இனம் பெருக்கிக் கொள்கிறது. இது ஒரு காலத்தினுள் செல்வதற்கு முன்னால் உறங்கு நிலையில் உயிரற்ற மூலக்கூறு போன்று காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அனைத்து வைரஸ்களும் அனைத்து கலங்களையும் தாக்குமா?
குறிப்பிட்ட இன வைரஸ்கள் குறிப்பிட்ட இன கலங்களை மட்டும் தாக்கும். அதற்கு காரணம் ஒவ்வெரு கலத்தின் மேற்பரப்பிலும் வேறுவேறான புரத கட்டமைப்புகள் காணப்படுகின்றன. ஒரு கலத்தினை ஒரு வைரஸ் தாக்க வேண்டுமென்றால் அந்தக் காலத்தின் புரதக் கட்டமைப்பு அந்த வைரஸ் இன் புரத கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொண்டால் மட்டும் அந்த வைரஸ் அந்தக் காலத்தை தாக்க முடியும், இல்லையென்றால் அந்த வைரஸ் அந்தக் காலத்தினை தாக்க முடியாது.
வைரஸ்களை அவற்றின் வாழ்க்கை வட்டத்தின் அடிப்படையில் அது சார்ந்து வாழும் கலத்தினை மையமாக வைத்து பிரதானமாக இரண்டாக பிரிக்கலாம்.
1. தாவர வைரஸ்
தாவரக்கலம் ஒன்றின் உதவியுடன் தனது வாழ்க்கை வட்டத்தை பூர்த்தி செய்யும் அனைத்து வைரஸ்களும் தாவர வைரஸ் ஆக கருதப்படும். பெரும்பாலும் தாவர வைரஸ்கள் இனால் விலங்கு கலங்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
2. விலங்கு வைரஸ்
விலங்கு கலம் ஒன்றின் உதவியுடன் தனது வாழ்க்கை வட்டத்தை பூர்த்தி செய்யும் அனைத்து வைரஸ்களும் விலங்கு வைரஸ் ஆக கருதப்படும். பெரும்பாலும் விலங்கு வைரஸ்கள் இனால் தாவர கலங்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸின் அடிப்படை கட்டமைப்பு
வைரஸின் நடுப்பகுதியில் DNA/RNA காணப்படும். இந்த DNA/RNA இனால் வைரஸின் அத்தனை தொழிற்பாடுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது
அந்தக் காலத்தில் தன்னை எவ்வாறு இனம் பெருக்கி கொள்ள வேண்டும்,
அந்தக் காலத்தினை எவ்வாறு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்
போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. இந்த DNA/RNA இனை பாதுகாப்பதற்கு இதனை சுற்றி புரத உறை ஒன்று காணப்படும் இது Capsid என்று அழைக்கப்படும். இந்த Capsid ஆனது Capsomere என்ற புரதத்தின் ஆல் ஆக்கப்பட்டிருக்கும். கூறப்பட்ட இந்த தொகுதியானது NucloCapsid என்று அழைக்கப்படுகிறார். இது வீரியமான ஒரு தொகுதியாகும்.
வைரஸ்கள் அடிப்படையில் நான்கு வேறுபட்டு உருவ அமைப்புகளில் காணப்படுகின்றன.
- Icosahedron Virus
- Helical Structure Virus
- Enveloped Virus
- Complex Structure Virus
COMMENTS