Xiaomi Redmi Poco Phone Have MI account. Create new mi account or Xiaomi Account and Login MI Account. This is MI Cloud Account. Account login problem
MI Account என்றால் என்ன?
Xiaomi நிறுவனம் தமது நிறுவனத்தின் உற்பத்திகள் ஆகிய Redmi, MI, Poco Phone ஆகிய மூன்று தொலைபேசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இந்த தொலைபேசிகளில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் (Android) இயங்கு தளத்துடன் Xiaomi நிறுவனத்தின் MIUI இணையும் கொண்டிருக்கும். அதே சமயத்தில் Xiaomi நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் A இல் ஆரம்பிக்கும் வகையினை சேர்ந்த Xiaomi தொலைபேசிகள் MIUI இல்லாமல் ஆண்ட்ராய்ட் (Android) இயங்கு தளத்தினை மட்டும் கொண்டிருக்கும்.
MI Account
அனைத்து Xiaomi தொலைபேசிகளுக்கும் அந்த நிறுவனத்தினால் கொடுக்கப்படும் Cloud, பாதுகாப்பு அமைப்பு MI Account ஆகும்.
இந்த Account ஆனது பிரதானமாக தொலைபேசி இலக்கம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகிறது. அத்துடன் E Mail ID ஒன்றும் அத்தியாவசியமாகும்.நாங்கள் வைத்திருக்கும் தொலைபேசி இலக்கத்தை மாற்றும் சந்தர்ப்பத்தில் இந்த Account இலும் தொலைபேசி இலக்கத்தை புதிய இலக்கத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனென்றால் நாங்கள் Account இன் கடவுச்சொல் (Password) மறந்தால் அதை மீட்டமைக்க (Reset) தொலைபேசிக்கு குறுந்தகவல் பெறவேண்டியது அவசியமானதாகும்.
Lost Device Find
MI Cloud இல் Find Device என்ற பகுதி On நிலையில் இருக்குமாயின் எமது தொலைபேசி தொலைந்தால் அதனை இணையத்தின் ஊடாக எங்கு இருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியும். தொலைந்த தொலைபேசியும் இணையத்துடன் இணைக்கப் பட்டிருப்பது அவசியமாகும். எமது தொலைந்த தொலைபேசியில் உள்நுழை செய்யப்பட்டிருக்கும் Account இனை இன்னும் ஒரு Xiaomi நிறுவனத்தின் தொலைபேசியில் உள்நுழை செய்து Device என்ற பகுதியினுள் சென்றால் அங்கு தொலைந்த தொலைபேசியின் (Model) ரகம் காணப்படும்.
தொலைந்த தொலைபேசியை தெரிவு செய்தால் தொலைந்த தொலைபேசி இருக்கும் இடத்தினை நாம் எமது தொலைபேசியின் திரையில் அவதானிக்கலாம். இந்த Google Map இன் உதவியுடன் தொலைந்த தொலைபேசி இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.
Xiaomi Cloud
Xiaomi Cloud இல் சேகரிக்கப்படும் விடயங்கள் Calendar, Contacts, Account Detail, SIM Card Status, Call History, Notes, Browser Bookmark History Tap, Gallery, Recorder, Wi-Fi Settings மற்றும் Messages என்பவையாகும்.
Xiaomi நிறுவனம் Xiaomi தொலைபேசி பாவனையாளர்களுக்கு இலவசமாக 5 GB Cloud இடத்தினை வழங்குகின்றது. இதைவிட 50 GB, 200 GB, 1 TB என்ற அளவுகளில் Xiaomi Cloud Storage இனை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளமுடியும்.
குறிப்பு :-
MI Account இன் கடவுச்சொல்லை மறந்து மீட்டமைக்க முடியாத சந்தர்ப்பத்தில், நாம் தொலைபேசி விற்பனையாளரிடம் சென்று அந்தத் தொலைபேசியில் உள்ள Account ஐ அந்த தொலைபேசியில் இருந்து முற்றாக அளிக்க முடியும்.
உங்களுக்கு இந்தப்பதிப்பு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூகவலைத்தள இணைப்புக்களில் பகிருங்கள். இந்தப்பதிப்பு சார்பாக ஏதாவது உங்கள் கருத்துக்கள் இருப்பின் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெருவியுங்கள்.
Samsung Reactivation Lock என்றால் என்ன?
This is really good content
ReplyDelete