FRP என்றால் Android இயங்குதளத்தில் 5.1 Version இற்கும் அதற்கு கூடிய Version இற்கும்வளங்கியுள்ள பாதுகாப்பு android frp lock அமைப்பாகும்.
Android FRP Lock என்றால் என்ன?
FRP என்றால் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தில் 5.1பதிப்பிற்கும் (Version) அதற்கு கூடிய பதிப்புகளிற்கும் (Version) வழங்கியுள்ள பாதுகாப்பு அமைப்பாகும்.
FRP எவ்வாறு இயங்குகின்றது ?
உங்கள் சாதனத்தில் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தில் ஒரு Google கணக்கை (Account) புதிதாக உருவாக்கும் பொழுது அல்லது முன்னர் ஒரு Google கணக்கை (Account) உள் நுழை (Log In) செய்யும் பொழுது FRP தானாக செயல்படுத்தப்படுகின்றது.
FRP எவ்வாறு பாதுகாப்பு வழங்குகிறது ?
FRP பாதுகாப்பு எமது ஆண்ட்ராய்டு (Android) சாதனத்திற்கு தேவை என்றால் சாதனம் Google கணக்கை (Account) உள் நுழை (Log In) செய்யப்பட்டிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு திரைப்பூட்டு (Screen Lock) இடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
எமது ஆண்ட்ராய்டு (Android) சாதனமானது தொலைந்தால் அல்லது களவாடப்பட்டால் சாதனத்ததை திரைப்பூட்டு (Screen Lock) இல்லாமல் செய்வதற்காக Hard Reset செய்வது அவசியமாகும். இவ்வாறு Hard Reset செய்த சாதனத்தை மீண்டும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குள் (Android OS) செல்வதற்கு முயற்சிக்கும் பொழுது, முன்னர் உள் நுழை (Log In) செய்யப்பட்ட Google கணக்கு (Account) மீண்டும் உள் நுழை (Log In) செய்தல்அவசியமாகும். Google கணக்கு (Account) இல்லை என்றால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குள் (Android OS) உட்செல்ல முடியாது. இதுவே FRP LOCK ஆகும்.
குறிப்பு
நாம் எமது அன்றோய்டு (Android) தொலைபேசி ஒன்றின் வினைத்திறன் குறையும் சந்தர்ப்பத்தில் அந்த தொலைபேசியை முற்றாக அழித்து ஃபேக்டரி ரீசெட் (Factory Reset) செய்யும் தேவை ஏற்படுகிறது. இந்த செயற்பாட்டினை செய்யும்பொழுது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் தற்சமயம் உள் நுழை(Log In) செய்யப்பட்டிருக்கும் Google கணக்கை (Account) தெரியாது என்றால் அந்த அக்கவுண்ட்டினை (Account) தொலைபேசியில் இருந்து நீக்கிவிட்டு ஃபேக்டரி ரீசெட் (Factory Reset) செய்ய வேண்டும். இல்லையென்றால் தொலைபேசியில் FRP LOCK ஏற்பட்டுவிடும். இதனால் ஃபேக்டரி ரீசெட் (Factory Reset) செய்த தொலைபேசி மீண்டும் பாவிப்பதற்கு முதலில் இருந்த Google கணக்கு (Account) அத்தியாவசியமானதாக இருக்கும். இல்லையென்றால் தொலைபேசியை பாவிக்க முடியாது.
(Android) இயங்குதளத்தில் 5.1பதிப்பிற்கும் (Version) அதிகமாக உள்ள அனைத்து அன்றோய்டு தொலைபேசிகளில் பொதுவாக உள்ள பாதுகாப்பு அமைப்பு FRP LOCK மட்டுமே ஆகும்.
Nice one
ReplyDeleteநன்றி
Delete