ICloud என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால் ICloud Lock என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். ICloud meaning in Tamil.
Apple ICloud Lock என்றால்....என்ன?
ICloud என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால் ICloud Lock என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும்.
ICloud என்றால் அப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புக்களாகிய IPhone, IPod, IPad, Mac Book, Mac ஆகிய உற்பத்திகளிற்கு உருவாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்பாகும்.
இது ஒரு அப்பிள் ID இனால் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்பிள் ID இல் இரண்டு பகுதிகள் உள்ளது.
1. Apple ID
2. Password
இது கீழ் வரும் வசதிகளை கொண்டுள்ளது.
1. கடவுச்சொல் (Password) பாதுகாப்பு வசதியை கொண்டிருப்பதால் இரகசியங்களை, முக்கிய விடையங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். (Password Protect)
2. iCloud ஆனது ஒன்லைன் (Online) இயங்குகின்றது.
3. ஒன்லைன் (Online) சேமிப்பிடம் (Cloud Storage) கொண்டுள்ளது. இந்த சேமிப்பிடம் 5GB இலவசமாக வளங்கப்படுகின்றது. 5GB ஐ விட அதிகமாக சேமிப்பிடம் (Cloud Storage)தேவையென்றால் பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வெண்டும்.
4. சாதனம் (Device) இருக்கும் இடத்தினை அறியக்கூடிய (Location) வசதி உள்ளது.
ஒரு அப்பிள் ID இல் அப்பிள் தொலைபேசி ஒன்று ICloud பகுதியில் உள் நுழை (Log In) செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அந்த தொலைபேசியில் ICloud என்ற பகுதியிணுள் Find My Iphone என்ற பகுதி ON நிலையில் இருந்தால், தொலைபேசி ஒன்லைன் (Online) இல் இருக்கும் சந்தர்ப்பத்தில், வேறு ஒரு அப்பிள் தொலைபேசியின் Find My Iphone என்ற App இனுள் முன்னர் உள் நுழை (Log In) செய்த அப்பிள் ID இனை உள் நுழை (Log In) செய்தால் முதலில் குறிப்பிட்ட தொலைபேசி இருக்கும் இடத்தினை இந்த தொலைபேசியில் அவதானிக்கலாம்.
5. சாதனம் களவாடப்பட்டால் அல்லது தொலைந்தால் சாதனத்தில் உள்ள தகவல்களை (Data) ஒன்லைன் (Online) மூலம் முற்றாக அழிக்க கூடிய, எச்சரிக்கை அலாரம் ஒலியினை ஒலிக்க செய்யக்கூடிய வசதியை கொண்டுள்ளது.
தொலைந்த தொலைபேசியில் உள்ள தகவல்களை (Data) ஒன்லைன் (Online) மூலம் முற்றாக அழிப்பதற்கு, வேறு ஒரு அப்பிள் தொலைபேசியின் Find My Iphone என்ற App இனுள் தொலைந்த தொலைபேசியில் உள் நுழை (Log In) செய்த அப்பிள் ID ஐ உள் நுழை (Log In) செய்தால் App இனுள் தொலைந்த தொலைபேசியை அழிப்பதற்கான Erase Iphone என்ற கட்டளை இருக்கும் இந்த கட்டளையை அழுத்தும்போது தொலைந்த தொலைபேசிக்கு அழிப்பதற்கான கட்டளை ஒன்லைன் (Online) மூலம் அனுப்பப்பட்டு முற்றாக அழிக்கப்படும்.
முன்னர் கூறிய முறையில் தொலைந்த தொலைபேசியில் எச்சரிக்கை அலாரம் ஒலியினை ஒலிக்க செய்யவும் முடியும்.
இவ்வாறு முற்றாக அழிக்கப்பட்ட தொலைபேசியை மீண்டும் செயற்படுத்துவதற்கு இறுதியாக தொலைபேசியில் உள் நுழை (Log In) செய்த அப்பிள் ID அவசியமானது.
அப்பிள் ID இல்லை என்றால் ICloud Lock / Activation Lock உள்ளது ஆகும்.
Android FRP Lock என்றால் என்ன?
ICloud Offical Link
superb
ReplyDeleteநன்றி
DeleteVery Good Keep it up
ReplyDelete