SAR Value Low Radiation தொலைபேசிகளை தெரிவுசெய்து கொள்வனவு செய்யவேண்டும். sar value கதிர் வீச்சினால் பல வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். Specific Absorption Rate
தொலைபேசியின் SAR Value கதிர்வீச்சு.....
SAR Value (Specific Absorption Rate)
SAR Value
SAR Value என்றால் கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் ரேடியோ அதிர்வின் கதிர்வீச்சின் அளவு ஆகும். கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சினால் பல வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
மனிதனின் தலைப்பகுதி மண்டை ஓட்டினால் ஆக்கப்பட்டிருப்பதால் SAR Value தலைப்பகுதிக்கு குறைந்த பாதிப்பையும், மற்றைய உடலின் பாகங்களிற்கு அதிகமான பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனால் தலைப்பகுதிக்கு வேறாகவும், உடற்பகுதிக்கு வேறாகவும் SAR Value கணிக்கப்படுகின்றது. இந்த SAR Value ஆனது ஐரோப்பிய நாடுகளுக்கு வேறாகவும் அமெரிக்கா நாடுகளுக்கு கணிக்கப்படுகிறது.
இந்த அளவானது ஐரோப்பிய நாடுகளுக்கு 2 W/Kg இற்கு கீழே இருக்க வேண்டும் என்றும், அமெரிக்கா நாடுகளுக்கு 1.6 W/Kg இற்கு கீழே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலும் அதிகமான SAR Value உள்ள தொலைபேசிகளை எந்த நிறுவனமும் அங்கீகாரத்துடன் உற்பத்தி செய்ய முடியாது.
முக்கிய குறிப்பு
குழந்தைகளிடம் தொலைபேசிகளை அவர்களிற்கு அருகில் விளையாட்டு பொருட்களாக கொடுத்தல் கூடாது. ஏனென்றால் குழந்தைகளின் உடல் அமைப்பானது வயது வந்தவர்களைவிட மிகவும் மென்மையானது, அதனால் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளுக்கு ஈடானவர்கள். ஏனென்றால் அவர்களின் வயிற்றில் உள்ள சிசுவும் குழந்தைகளை விட மிகவும் மென்மையானது.
WiFi, Network இணைப்புகள் துண்டிக்கப்பட்ட Airplane Mode இல் உள்ள தொலைபேசிகள் கதிர்வீச்சினை வெளியிடாது. அதனால் Airplane mode இல் உள்ள தொலைபேசிகள் பாதிப்பற்றவை. குழந்தைகளிடம் தொலைபேசிகளை அவர்களிற்கு அருகில் விளையாட்டு பொருட்களாக கொடுக்கும் பொழுது தொலைபேசிகளை Airplane Mode இல் மாற்றுதல் அவசியமாகும். Airplane Mode இல் ஒன்லைன் Online வேலைகள் எதையும் செய்யமுடியாது.
SAR Value குறைவாக உள்ள தொலைபேசிகளை தெரிவுசெய்து கொள்வனவு செய்யவேண்டும்.
SAR Value இனை அறிந்து கொள்வதற்கு Google தேடலில் SAR Value இனை அறிந்து கொள்ள வேண்டிய தொலைபேசியின் ரகத்தின் (Model) SAR Value என்று தேடும் போது அத்தொலைபேசியின் SAR Value வீதத்தினை அறிந்து கொள்ள முடியும்.
உதாரணம் :- Nokia 2 SAR Value என்று தேட வேண்டும்
SAR Value இனை திருத்தமாக அறிந்துகொள்வதற்கு சிறந்த இணையத்தளம் உள்ளது. இணையத்தினுள் செல்வதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள். Device Specifications
இவ்விணையத்தளத்தில் தொலைபேசியின் SAR Value இனை அறிந்துகொள்ளும் போது இத்தொலைபேசியின் மேலும் கீழும் இதைவிட குறைந்த கூடிய SAR Value உள்ள தொலைபேசிகள் வரிசையாக இருக்கும்.
Nice
ReplyDeleteNice answer
ReplyDelete