Android Hard Reset என்று ஒரு வசதி உள்ளது. Hard Reset என்றால் தொலைபேசியில் உள்ள தகவல்களை முற்றாக அழிப்பதற்கு Formate செய்யப்பட்டுள்ள ஒரு வசதி ஆகும்.
Android இல் Hard Reset என்றால் என்ன?
Hard Reset |
அன்றொயிட் தொலைபேசிகளில் Hard Reset என்று ஒரு வசதி உள்ளது. Hard Reset என்றால் தொலைபேசியில் உள்ள தகவல்களை முற்றாக அழிப்பதற்கு (Formate) செய்யப்பட்டுள்ள ஒரு வசதி ஆகும். இந்த அழிக்கும் செயன்முறையை செய்வதற்கு அன்றொயிட் இயங்குதளத்தின் உள்ளே செல்வது (Android OS)அவசியமற்றது. ஏனென்றால் இந்த செய்முறை ஆனது அன்றொயிட் (Android) இன் Boot இல் உள்ள ஒரு சிறிய மென்பொருள் CWM (ClockWorkMod) இனால் கட்டுப்படுத்தப்படுகின்றது. முற்றாக OFF நிலையில் உள்ள அன்றொயிட் தொலைபேசியை ON செய்யும் அந்த கணப்பொழுதில் தொலைபேசியில் உள்ள Power Switch, Volume - , Volume + , Home Switch ஆகிய Switch களை பயன்படுத்தி தொலைபேசியை வேறுவேற நிலைகளுக்கு (Mod) மாற்றலாம்.
உதாரணம் :-
1. CWM (ClockWorkMod)
2. Download Mod
3. Safe Mod
மேலே கூறப்பட்ட இந்த Mod கள் சாதாரணமான தொலைபேசி பாவனைக்கு அவசியமற்றவை ஆகும். தொலைபேசிகளில் குறைகள் (Fault) ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் இந்த Mod களுக்கு அவசியம் ஏற்ப்படும்.
பின்வரும் குறைகளுக்கு (Fault) இந்த Mod கள் அவசியம் தேவை
1. Virus பாதிப்புக்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் Formate செய்வதற்கு
2. புதிதாக Android OS Install செய்வதற்கு Download Mod இற்கு மாற்றுவதற்கு
3. User Lock மறந்தால் Hard Reset செய்வதற்கு
4. Android OS Stuck ஏற்ப்பட்டால் Formate செய்வதற்கு
Hard Reset செய்வது எப்படி?
முற்றாக OFFநிலையில் உள்ள அன்றொயிட் தொலைபேசியை ON செய்யும் சந்தர்ப்பத்தில் Volume + Switch இனை அழுத்தி பிடித்திருக்க வேண்டும், தொலைபேசியில் உள்ள திரையில் அன்றொயிட் (Android) பொம்மை அடையாளம் வந்ததவுடன் Volume + Switch இனை அழுத்தி பிடித்திருப்பதை விடுதல் வேண்டும். இப்போது CWM (ClockWorkMod) Menu தோன்றும். இந்த Menu இல் Wipe என்று காணப்படும் இரண்டு கட்டளைகளையும் சேயற்படுத்துவதன் மூலம் தொலைபேசியை Hard Reset செய்ய முடியும். மேலே தரப்பட்ட Hard . Reset முறை பொதுவான ஒரு முறை ஆகும். சில தொலைபேசிகளில் இந்த முறை வேலைசெய்யாது. தொலைபேசியை Hard . Reset செய்யும் கட்டளைகளை ஒவ்வொரு தொலைபேசிக்கும் தனித்தனியாக பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பினை அழுத்துங்கள்.
COMMENTS