Hyperloop Train capsule go through the tube fast equal sound speed and reach long distance short time. Hyperloop Transport Technologies in Tamil Hyperloop Tamil
Hyperloop Train என்றால் என்ன?
Hyperloop Train என்றால் குழாய் போன்ற வடிவத்தில் பூமிக்கு மேல் பகுதியில் பாலத்தில் அல்லது பூமிக்கு உள்ளே சுரங்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு வெற்றிட பாதையினையும், இந்த பாதையின் உள் பகுதியினுள் குழிகை (Capsule) போன்ற வடிவத்தில் பயணிகள் பயணிக்கும் பகுதியையும் கொண்டிருக்கும். இந்த Capsule பகுதியில் தான் பயணிகள் பயணம் செய்வார்கள்.
![]() |
Hyperloop Trainவேகம் |
இந்த ரயில் மணிக்கு சராசரி 1200 km/h வேகத்தில் பயணம் செய்யக்டியதாக வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த Hyperloop ரயில் வேகம் சராசரி ஒலியின் (Sound) வேகத்திற்கு நிகரானது. ஒலியின் (Sound) வேகம் வளியில் 1,234.8 km/h என்பது குறிப்பிடத்தக்கது.
Hyperloop எவ்வாறு செயற்படுகின்றது?
Hyperloop ரயில் என்பது இயங்குவதற்கு ஓடு பாதையான குழாய்க்கும், பயணிகள் பயணிக்கும் Capsule என்று கூறடும் பயணிகள் பகுதிக்கும் இடையில் காந்த புலம் உண்டாக்க பட்டும். இந்த Capsule காந்த இலகு மையத்தை பயன்படுத்தி ஓடு பாதையில் காந்த பாயத்தில் மிதந்து சறுக்கிச்சென்று அதிக வேகத்தில் பயணிக்கின்றது.
காற்றுத்தடை நிவர்த்தி அமைப்பு
ரயில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில், பாதையான குழாயினுள் காற்றினால் ஏற்படும் தடையை நிக்குவதற்காக காற்றினை உறுஞ்சி வெளியே தள்ளும் Compressors அமைப்புகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிக வேகத்தில் குழாய் பாதையினுள் பயணிகளை தாங்கிய Capsule பயணிப்பதனால் காற்று உராய்வு ஏற்படும். இதனால் தீ பற்றுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதால் உராய்வை குறைப்பதற்கு இந்த தொகுதியில் இந்த காற்றினை உறுஞ்சி வெளியே தள்ளும் Compressors அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வானத்தில் இருந்து பூமி நோக்கி வரும் கற்கள் பூமியின் வளிமண்டலத்தினுள் பிரவேசித்ததும் அதிக வேகம் காரணத்தால் வளிமண்டலத்துடன் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
Hyperloop ரயில் இயங்க சக்தி எவ்வாறு கிடைக்கின்றது?
Hyperloop ரயில் இயங்க எந்த எரிபொருளும் தேவையில்லை ஏனெனில் ஓடு பாதையான குழாயின் கூரையில் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள சூரிய தகடுகள் (Solar) மூலமாக பெரிய மின்கலங்கள் மின்னேற்றம் செய்யப்பட்டு இந்த ரயில் ஓடுவதற்கு தேவையான மின் சக்தியை கொடுக்கின்றன. நீருக்கு அடியில் அல்லது நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதையில் Hyperloop ரயில் அமைக்கப்படும் போது சூரிய சக்தியினால் மின்கலங்கள் மின்னேற்றம் பட்டு இந்த ரயில் தொகுதிக்கு மின்சக்தி வழங்குவது சாத்தியம் குறைவானதாகும்
நன்மைகள்
* ரயில் சேவையினால் சூழல் மாசடைதல் எதுவும் ஏற்படாது.
* ரயிலில் குறைந்த நேரத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்.
* பூமி அதிர்வு ஏற்படும் சந்தர்ப்பத்தில் இந்த அமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தீமைகளை
* இந்த பயண அமைப்பின் உற்பத்தி முதலீடு மிகவும் அதிகமானது.
* குறுகிய தூர பயணங்கள் செய்வதற்கு இந்த பயண அமைப்பு சிறந்து இல்லை.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் இந்த Hyperloop ரயில் தொகுதியை செய்வது சாத்தியமில்லை.
super
Delete