Anaglyph 3D முப்பரிமான வீடியோகளை சதாரண கணினி, சதாரண தொலைக்காட்சி, தொலைபேசி என்பவற்றில் Anaglyph 3D கண்ணாடி உதவியுடன் பார்க்கலாம்.
Anaglyph 3D வீடியோ என்றால் என்ன?
Anaglyph முப்பரிமான வீடியோ என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முதலில் 3D என்றால் என்னவென்று அறிந்து கொள்வேண்டும்.
3D என்றால் என்னவென்று பட விளக்கத்துடன் பார்ப்போம்.
மேலே படத்தில் காட்டியவாறு முப்பரிமான பொருளானது, மனிதனின் இரண்டு கண்களினாலும் வேவ்வேறு வித்தயாசமான இரண்டு விம்பங்களாக உணரப்படுகின்றது. இவ்வாறு உணரப்படுகின்ற இரண்டு விம்பங்களும் மனிதனின் மூளையினால் நீளம், அகலம், உயரம் ஆகிய தோற்றப்பாடுகளை உடைய முப்பரிமான தோற்றமாக உணரப்படுகின்றது. மனிதனின் ஒரு கண்ணினால் மட்டும் முப்பரிமான தோற்றத்தை உணர முடியாது. ஆகவே இரண்டு கண்களும் தெளிவான பார்வை உள்ளவர்கள் மட்டுமே முப்பரிமான தோற்றங்களை நன்றாக உணர முடியும்.
Anaglyph 3D
Anaglyph முப்பரிமான வீடியோகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
முப்பரிமான Camera இனால் வீடியோ பதிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இடது பக்க, வலது பக்க வீடியோ பகுதிகள் இரண்டும் தனித்தனியாக பதிவு செய்யப்படுகின்றது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட இரண்டு இடது, வலது வீடியோ பதிவுகளில் இருந்தே Anaglyph முப்பரிமான வீடியோ கணினி மூலம் தயாரிக்கப்படுகின்றது. அடிப்படையில் ஒளியில் மூன்று வர்ணங்கள் இருக்கும். அந்த வர்ணங்கள் சிவப்பு, நீலம், பச்சை ஆகும். பதிவு செய்யப்பட்ட இடது வீடியோவில் இருந்து நீலம், பச்சை நிறங்கள் கணினி மூலம் நீக்கப்பட்டு சிவப்பு வர்ணத்தில் வீடியோ மாற்றப்படுகன்றது. இதே முறையில் வலது வீடியோவில் இருந்து சிவப்பு வர்ணம் கணினி மூலம் நீக்கப்பட்டு நீலம், பச்சை இரண்டின் கலப்பு வர்ணமாகிய (Cyan) சயன் வர்ணத்தில் வீடியோ மாற்றப்படுகன்றது. இந்த இரண்டு வீடியோகளையும் கணினி மூலம் ஒன்றாக இணைத்த வீடியோ Anaglyph முப்பரிமான வீடியோகள் என்று அழைக்கப்படுகிறது.
![]() |
Anaglyph 3D |
மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Anaglyph திரையில் இருந்து வெளிவரும் வீடியோவில் உள்ள ஒரு வர்ண வீடியோவானது ஒரு கண்ணாடியினுள் செல்லும் அதே நேரத்தில் மற்றைய கண்ணாடியினுள் செல்லாது, இதே போல் மற்றைய வர்ண வீடியோவானது ஒரு கண்ணாடியினுள் செல்லும் அதே நேரத்தில் மற்றைய கண்ணாடியினுள் செல்லாது, இதனால் இரண்டு கண்களினாலும் இடது, வலது விம்பங்களை உணர்வதால் வீடியோவில் முப்பரிமான தோற்றத்தை உணர முடியும். Anaglyph முப்பரிமான வீடியோகளை சதாரண கணினி திரைகள், சதாரண தொலைக்காட்சி திரைகள், தொலைபேசி திரைகள் என்பவற்றில் Anaglyph 3D கண்ணாடி உதவியுடன் பார்க்கலாம்.
குறிப்பு :-
Anaglyph 3D வீடியோ தொழில்நுட்பமே முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட 3D தொழில்நுட்பமாகும். இந்த முறையில் 3D படங்களை பார்வையிடும்போது மனிதனின் கண்ணில் வேறு வேறு நிறங்களில் விம்பங்கள் தோற்றுவிக்க படுவதால் மனிதனின் கண்ணில் மிகவும் தெளிவான வீடியோக்களை பார்வையிட முடியாது. இதனால் இந்தத் தொழில்நுட்பமானது இன்றைய காலத்தில் அற்றுப்போய்விட்டது. இதற்கு பதிலாக Polarized 3d தொழில்நுட்பம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த முறை மூலம் மிகவும் தெளிவான வீடியோக்களை பார்வையிட முடியும். Polarized 3d தொழில்நுட்பம் பற்றிய வெளியீடு மிக விரைவில் எங்கள் இணையதளத்தில் பிரசுரிக்கப்படும்.
உங்களுக்கு இந்தப்பதிப்பு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூகவலைத்தள இணைப்புக்களில் பகிருங்கள். இந்தப்பதிப்பு சார்பாக ஏதாவது உங்கள் கருத்துக்கள் இருப்பின் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெருவியுங்கள்.
பதிப்பு நன்று
Deleteபயனுள்ளதாக உள்ளது.