Create Best Blogger Post SEO Tips தமிழில்.. Blogger SEO Tips in Tamil Search Engine Optimization Blogger SEO Blogger SEO tamil
Blogger Post SEO தமிழில்...
பிளாக்கரில் (Google Blogger) நாம் புதிதாக வெளியிடும் போஸ்ட் (Blogger Post SEO) ஒன்றினை Google Search இல் முதல் பக்கத்தில் கொண்டு வருவது எப்படி?
பிளாக்கர் (Blogger) அல்லது வெப்சைட் (Wepsite) போன்றவற்றில் புதிய வெளியீடுகளை (Post) செய்யும்போது, முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் அந்த வெளியீட்டினை கூகுள் தேடலில் முதல் பக்கத்தில் கொண்டு வருதல் ஆகும். இந்த செயற்பாட்டினை Search Engine Optimization (SEO) என்று கூறுவார்கள்.
1. KeyWord தெரிவு செய்தல்
கூகுள் பிளாக்கரில் நாம் வெளியிடும் ஒவ்வொரு Post ஐயும் கூகுள் தேடலில் (Google Search) முதல் பக்கத்தில் கொண்டுவருவதற்கு நாம் தெரிவு செய்யும் "KeyWord" பிரதான பங்கு வகிக்கிறது. நாம் தெரிவு செய்யும் "KeyWord" Post இல் நாம் கூற விருக்கும் விடயத்துக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கூகுள் தேடலில் "KeyWord" ஒன்றினை தேடி எமது வலைத்தளத்தின் உள் பிரவேசிக்கும் ஒருவர் அவருக்கு தேவையான விடயம் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக எமது வலைத்தளத்தை விட்டு வெளியேறுவார். இவ்வாறு வெளியேறுவதால் எமது வலைத்தளத்தின் Bounce Rate அதிகரிக்கும் இவ்வாறு அதிகரிப்பது நன்று அல்ல. எனவே "KeyWord" தெரிவு செய்யும்போது மிகவும் அவதானமாக நமது Post இக்கு தொடர்புடைய "KeyWord" தெரிவுசெய்ய வேண்டும். அத்துடன் நாம் தெரிவு செய்யும் "KeyWord" கூகுள் தேடலில் அனைவரும் தேடும் "KeyWord" ஆக இருக்க வேண்டும்.
2. Post Title
எமது Post Title இல் நாம் பாவிக்கும் "KeyWord" நிச்சயமாக இருக்க வேண்டும்.
3. Post Images
Post பகுதியில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Images கொடுக்கப்பட வேண்டும். கொடுக்கப்படும் Image இன் Image Properties பகுதியினுள் Title Text, ALT Text என்ற பகுதியில் "KeyWord" கொடுக்கப்படுதல் அவசியமானதாகும்.
4. Sub Heading
எமது Sub Heading இல் நாம் பாவிக்கும் "KeyWord" நிச்சயமாக இருக்க வேண்டும்.
5. Post Content
Post Content இல் முக்கியமாக குறைந்தது 300 சொற்கள் இடம்பெற வேண்டும். இந்த 300 சொற்களில் ஒரு சொல் திரும்பத் திரும்ப 10 தடவைகளுக்கு மேல் பாவிக்காமல் இருப்பது சிறந்தது. Post Content பகுதியினுள் இடம்பெறும் "KeyWord" 2.5% இக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். நாம் கொடுக்கும் விடயம் 150 வார்த்தைகளுக்கு அதிகமானால் Heading கொடுக்கப்பட வேண்டியது அவசியமா. 150 வார்த்தைகளுக்கு மேல் Heading இல்லாமல் Contant எழுதப்படுபவை தவிர்க்கவும்.
6. Search Description
Search Description பகுதியினுள் நாம் தயாரிக்கும் Post சம்பந்தமாக கூகுள் தேடலில் எந்த KeyWord களை தேடுவார்களோ அந்த KeyWord களை கொண்டு 100 தொடக்கம் 160 சொற்களில் குறுகிய விளக்கம் ஒன்று வழங்கப்பட வேண்டும். இவ்விடத்தில் இடம்பெறும் KeyWord கள் Post ஐ கூகுள் தேடலில் முதல் பக்கத்தில் கொண்டுவர உதவி புரியும்.
7. Link
Internal Link - எமது Blogger இல் உள்ள இன்னும் ஒரு Post இக்கு செல்வதற்கு உரிய இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
External Link - எமது Post இல் கூறிய விடயத்திற்கு சம்பந்தமான விளக்கம் வேறொரு இணையத்தளத்தில் இருந்தால், அந்த இணைப்பினை பொருத்தமான இடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
8. Permalink
Permalink ஆனது Custom Permalink என்ற பகுதி தெரிவுசெய்யப்பட்டு எமது URL இல் தேடல் KeyWord இடம்பெறுமாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நன்றி Psprfarm Teams
DeleteNice article. Know about Bitwissend, web design company kerala.
Delete