Samsung Reactivation Lock என்றால் Samsung தொலைபேசிகளில் அன்ரொயிட் (Android) இயங்குதளத்தில் 4.4 (KitKat) பதிப்பிற்கும் (Version) அதற்கு கூடிய பதிப்புகளிற்கும் (Version) Samsung நிறுவனம் வழங்கியுள்ள பாதுகாப்பு அமைப்பாகும். இது Samsung தொலைபேசிகளில் மட்டும் உள்ள பாதுகாப்பு அமைப்பாகும்.
Samsung Reactivation Lock என்றால் என்ன?
Samsung Reactivation Lock |
Samsung Reactivation Lock என்றால் Samsung தொலைபேசிகளில் அன்ரொயிட் (Android) இயங்குதளத்தில் 4.4 (KitKat) பதிப்பிற்கும் (Version) அதற்கு கூடிய பதிப்புகளிற்கும் (Version) Samsung நிறுவனம் வழங்கியுள்ள பாதுகாப்பு அமைப்பாகும். இது Samsung தொலைபேசிகளில் மட்டும் உள்ள பாதுகாப்பு அமைப்பாகும்.
Samsung Reactivation Lock எவ்வாறு இயங்குகின்றது ?
உங்கள் Samsung தொலைபேசியில் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தில் ஒரு Samsung கணக்கை (Account) புதிதாக உருவாக்குதல் வேண்டும். அல்லது முன்னர் உருவாக்கிய ஒரு Samsung கணக்கை (Account) உள் நுழை (Log In) செய்யவும். பின்னர் தொலைபேசியில் Setting இல் Security அமைப்பினுள் Samsung Reactivation Lock இனை செயல்படுத்த (Enable) வேண்டும்.
Reactivation Lock எவ்வாறு பாதுகாப்பு வழங்குகிறது ?
Reactivation Lock செயற்படுத்தும் பொழுது,
* சிம் (SIM) மாறினால் சாம்சங் கணக்கை மீண்டும் உள்நுழைவு செய்ய வேண்டும்.
* தொலைந்து போன அல்லது களவாடப்பட்டால தொலைபேசியின் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.
Reactivation Lock பாதுகாப்பு எமது Samsung ஆண்ட்ராய்டு (Android) தொலைபேசிக்கு தேவை என்றால் Reactivation Lock இனை Enable செய்யப்பட்டிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு திரைப்பூட்டு (Screen Lock) இடப்பட்டிருத்தல் அவசியமாகும். திரைப்பூட்டு இடப்பட்டிருந்தால் எமது தனித்துவமான தகவல்களை பார்வையிடவும் மாற்றியமைக்கவும் முடியாது.
எமது ஆண்ட்ராய்டு (Android) சாதனமானது தொலைந்தால் அல்லது களவாடப்பட்டால் சாதனத்ததை திரைப்பூட்டு (Screen Lock) இல்லாமல் செய்வதற்காக Hard Reset செய்வது அவசியமாகும். இவ்வாறு Hard Reset செய்த சாதனத்தை மீண்டும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குள் (Android OS) செல்வதற்கு முயற்சிக்கும் பொழுது, முன்னர் உள் நுழை (Log In) செய்யப்பட்ட Samsung கணக்கை (Account) மீண்டும் உள் நுழை (Log In) செய்தல்அவசியமாகும். Samsung கணக்கை (Account) இல்லை என்றால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குள் (Android OS) உட்செல்ல முடியாது. இதுவே Samsung Reactivation Lock பாதுகாப்பு ஆகும்.
COMMENTS